Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கர்நாடகாவில் டி.ஜி.பி., நியமனத்தில் சர்ச்சை : இரு அதிகாரிகள் பதவி உயர்வு நிறுத்திவைப்பு

கர்நாடகாவில் டி.ஜி.பி., நியமனத்தில் சர்ச்சை : இரு அதிகாரிகள் பதவி உயர்வு நிறுத்திவைப்பு

கர்நாடகாவில் டி.ஜி.பி., நியமனத்தில் சர்ச்சை : இரு அதிகாரிகள் பதவி உயர்வு நிறுத்திவைப்பு

கர்நாடகாவில் டி.ஜி.பி., நியமனத்தில் சர்ச்சை : இரு அதிகாரிகள் பதவி உயர்வு நிறுத்திவைப்பு

ADDED : செப் 20, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
கர்நாடக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அருண் சக்ரவர்த்தி, உ மேஷ்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்ட டி.ஜி.பி., பதவி உயர்வை மத்திய நிர்வாக தீர் ப்பாயம் நிறுத்தி வைத்துள்ளது.

கர்நாடகாவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருப்பவர் அலோக்குமார். போலீஸ் பயிற்சி பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக உள்ளார். கடந்த 2018 - 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியின்போது, பெங்களூரு போலீஸ் க மிஷனராக பணியாற்றினார்.

அந்த நேரத்தில் முக்கிய பிரமுகர்களின் மொபைல் போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், இதில் அலோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் அலோக் குமார் மீது, துறைரீதியான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அலோக் குமார் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி கர்நாடக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அருண் சக்ரவர்த்தி, உமேஷ் குமார் ஆகியோருக்கு, டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

நோட்டீஸ் இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அலோக் குமார் மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.

'டி.ஜி.பி., பதவி உயர்வு கிடைக்கக் கூடாது என்பதற்காக, தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் என் மீது துறைரீதியான விசாரணைக் கு உத்தர விடப் பட்டது. என்னை விட ஜூனியர்களான அருண் சக்ரவர்த்தி, உமேஷ் குமாரை டி.ஜி.பி.,யாக பதவி உயர்த்தி விட்டு, என்னை இன்னும் கூடுதல் டி.ஜி.பி.,யாக வைத்தி ருப்பது சரியல்ல. அரசின் அ றிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என, மனுவில் அலோக் குமார் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சுஜாதா, சஜீவ் குமார் அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. நிர்வாக சீர்திருத்த ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை அருண் சக்ரவர்த்தி, உமேஷ்குமாருக்கு டி.ஜி.பி., பதவி உயர்வு அளித்த அரசின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.

தமிழகத்தை தொடர்ந்து...

தமிழகத்திலும் டி.ஜி.பி., பதவிக்கு பிரச்னை இருந்தது. டி.ஜி.பி.,யாக பதவி வகித்த சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். இவரது நியமனம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி நடந்து இருப்பதாக, வழக்கறிஞர் ஹென்றி திபேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழகத்தை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் டி.ஜி.பி., பதவிக்காக பிரச்னை ஏற்பட்டுள்ளது.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us