லோக்சபா தேர்தலில் போட்டி அரசியல் ஆலோசகர் விருப்பம்
லோக்சபா தேர்தலில் போட்டி அரசியல் ஆலோசகர் விருப்பம்
லோக்சபா தேர்தலில் போட்டி அரசியல் ஆலோசகர் விருப்பம்
ADDED : ஜன 13, 2024 11:12 PM

கலபுரகி: “நானும் கூட லோக்சபா தேர்தலில் போட்டியிட, ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு சீட் கிடைத்தால் போட்டியிடுவேன்,” என, முதல்வரின் அரசியல் ஆலோசகர் பி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
இதுகுறித்து, கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:
எனக்கு மாநில அரசியலை விட, தேசிய அரசியலில் ஆர்வம் அதிகம். நானும் கூட லோக்சபா சீட் எதிர்பார்க்கிறேன். கட்சி மேலிடம் அனுமதி அளித்தால், பீதர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவேன். வேறு யாருக்காவது சீட் கொடுத்தாலும், அவருக்காக பணியாற்றுவேன்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் என் விருப்பத்தை, முதல்வர் சித்தராமையாவிடம் கூறியுள்ளேன். பீதர் பசவண்ணர் பிறந்த மண். நான் பசவண்ணரின் விசுவாசி. அங்குள்ள பசவண்ணர் பக்தர்கள், விசுவாசிகளுடன் எனக்கு, நல்லுறவு உள்ளது.
என்னை மக்கள் ஆதரிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, மேலிடம் எனக்கு வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்.
இதற்கு முன் ராமகிருஷ்ண ஹெக்டே, நஜீர் சாப் இருந்தபோது, என்னை ராஜ்யபா உறுப்பினராக்குவது குறித்து, பேச்சு எழுந்தது. பல காரணங்களால் அது முடியாமல் போனது. தேசிய அளவிலான குடிநீர் போராட்டம், விவசாயிகள் போராட்டத்தில் நான் பங்கேற்றுள்ளேன்.
எனக்கு தேசிய அரசியலில் வளரும் ஆர்வம் உள்ளது. இதை முதல்வர் உட்பட, காங்கிரசின் பல முக்கிய தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


