நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்., சார்பில் வீடு கட்டிதரப்படும்: ராகுல்
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்., சார்பில் வீடு கட்டிதரப்படும்: ராகுல்
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்., சார்பில் வீடு கட்டிதரப்படும்: ராகுல்
ADDED : ஆக 02, 2024 03:30 PM

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு அதிகாரிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இது மிகவும் துயரமான சம்பவம். நிலச்சரிவில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்சி சார்பில் கட்டித் தருவோம். இது போன்ற துயரமான சம்பவத்தை கேரளா பார்த்தது இல்லை. இந்த விவகாரத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசிடம் எழுப்புவோம். இந்த மோசமான பேரிடரை, வித்தியாசமான முறையில் கையாள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களை அதே பகுதியில் குடியேற வேண்டும் என வலியுறுத்தக்கூடாது. அவர்கள் எங்கு விரும்புகிறார்களோ அங்கு குடியேற அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானவற்றை மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.