அமைச்சர் பதவி பறிப்பு காங்கிரஸ் மேலிடம் எச்சரிக்கை
அமைச்சர் பதவி பறிப்பு காங்கிரஸ் மேலிடம் எச்சரிக்கை
அமைச்சர் பதவி பறிப்பு காங்கிரஸ் மேலிடம் எச்சரிக்கை
ADDED : ஜன 12, 2024 11:27 PM

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெற செய்யாவிட்டால், அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று கட்சி மேலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், கர்நாடகாவின் 28 தொகுதிகளுக்கும் அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த அமைச்சர்களை புதுடில்லிக்கு வரவழைத்து, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அங்கிருந்து பெங்களூரு வந்த, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெற செய்யும் பொறுப்பை, ஒவ்வொரு அமைச்சரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பை நிறைவேற்றாத அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று கட்சி மேலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே லோக்சபா தேர்தலை அமைச்சர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலிடம் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை முதல்வர், துணை முதல்வருக்கும் பொருந்தும்.
முன்னாள் எம்.பி., முத்தனுமேகவுடா காங்கிரசில் இணைந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர் டிக்கெட் கேட்கக் கூடாது. கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம் குறித்து, தேசிய தலைவரே கூறிய பின், நான் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.