Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'அஸ்வமேதா கிளாசிக்' சொகுசு பஸ் அறிமுகம் முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்

'அஸ்வமேதா கிளாசிக்' சொகுசு பஸ் அறிமுகம் முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்

'அஸ்வமேதா கிளாசிக்' சொகுசு பஸ் அறிமுகம் முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்

'அஸ்வமேதா கிளாசிக்' சொகுசு பஸ் அறிமுகம் முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்

ADDED : பிப் 05, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 'அஸ்வமேதா கிளாசிக்' என்ற 100 'பாயின்ட் டூ பாயின்ட்' விரைவு சொகுசு பஸ்களை முதல்வர் சித்தராமையா நேற்று அறிமுகம் செய்தார்.

அடிக்கடி புது வகையான பஸ்களை அறிமுகம் செய்து, பயணியரின் கவனத்தை ஈர்ப்பதில் கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் முன்னிலை வகிக்கிறது. தன் சிறந்த சேவைக்காக பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளது.

இந்த வகையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 'அஸ்வமேதா கிளாசிக்' என்ற பெயரில், 100 'பாயின்ட் டூ பாயின்ட்' விரைவு சொகுசு பஸ்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.

பெங்களூரு விதான் சவுதா பெரிய படிக்கட்டுகள் முன்பு நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, பச்சைக்கொடி காண்பித்து பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.

கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமார், முக்கிய பிரமுகர்களை பஸ்சில் ஏற வைத்து, அதன் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினார்.

பின், சித்தராமையா பேசியதாவது:

'சக்தி' திட்டத்தின் கீழ் 146 கோடி பெண்கள் மற்றும் பள்ளி மாணவியர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இத்திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நான்கு ஆண்டுகளாக புதிய பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. கொரோனா சமயத்தில் 3,800 பஸ்கள் நிறுத்தப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், 5,800 புதிய பஸ்களை வாங்கி உள்ளோம்.

கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில், இந்த ஆண்டு 1,000 புதிய பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக, 100 பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மாநில மக்கள் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பயணிக்க தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கான உயிர் காப்பீடு தொகை 1 கோடி ரூபாயாகவும்; பணியின் போது இறக்கும் பணியாளர்களுக்கான இழப்பீடு தொகை 3 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று அறிமுகம் செய்யப்பட்ட 100 பஸ்களில், ஒரு பஸ் மட்டும் ஷிவமொகாவுக்கு இயக்கப்பட்டது. மற்ற பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

முன்பு இயக்கப்பட்டு வந்த கர்நாடக சாரிகே பஸ்களுக்கு பதிலாக, 'அஸ்வமேதா கிளாசிக்' அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

l 3.4 மீட்டர் உயரம்

l 50 இருக்கைகள் கொண்டவை

l புத்தகம், தண்ணீர் பாட்டில் வைக்கும் பை

l பெரிய ஜன்னல் கண்ணாடி

l முன்பக்கம், பின்பக்கம் கேமராக்கள்

l ஜி.பி.எஸ்., அவசர கால பட்டன் வசதி

l படிக்கட்டுகளில் எல்.இ.டி., விளக்குகள்

l ஓட்டுனரிடம் வாக்கி டாக்கி

சிறப்பு அம்சங்கள்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us