இந்த ஆண்டு வெள்ளம் தேங்காது முதல்வர் ரேகா குப்தா உறுதி
இந்த ஆண்டு வெள்ளம் தேங்காது முதல்வர் ரேகா குப்தா உறுதி
இந்த ஆண்டு வெள்ளம் தேங்காது முதல்வர் ரேகா குப்தா உறுதி
ADDED : ஜூன் 11, 2025 08:07 PM
புதுடில்லி::“இந்த ஆண்டு மழைக் காலத்தில் டில்லி மாநகரில் வெள்ளம் தேங்காது,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
மழைக் காலத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ரேகா குப்தா தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர்கள் ஆஷிஷ் சூட், பர்வேஷ் வர்மா, பா.ஜ., - எம்.பி.,க்கள் ராம்வீர் சிங் பிதுரி, பான்சூரி ஸ்வராஜ் மற்றும் பொதுப்பணித் துறை, வருவாய், நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு, டில்லி மாநகராட்சி உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் ரேகா குப்தா கூறியதாவது:
மழைக் காலத்தை சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், டில்லி மாநகரில் வெள்ளம் ஏற்பட்ட போது, தடுப்பணையின் கதவுகளை திறக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு மழைக் காலத்தில் டில்லி மாநகரில் வெள்ளம் தேங்காது. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்கு, அரசின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. அனைத்து வடிகால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. இதுவரை, 20 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் வடிகால்வாய்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2023ம் ஆண்டு பெய்த கனமழையால் டில்லி மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியது. மாநகரின் பல பகுதிகளில் இருந்து, 25,000 க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.