முதல்வர் கெஜ்ரிவால் மனு ; உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
முதல்வர் கெஜ்ரிவால் மனு ; உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
முதல்வர் கெஜ்ரிவால் மனு ; உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
ADDED : ஜூன் 26, 2024 02:27 AM

புதுடில்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்த டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்த அப்பீல் மனு மீது சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணை நடத்துகிறது.
மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, மே 10ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2ல் திஹார் சிறையில் சரணடைந்தார்.
ஜாமின் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவை கடந்த 20ல் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான விடுமுறை கால அமர்வு ஜூன் 21-ம் தேதி ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்து.
ஜாமின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பில் அப்பீல் மனு செய்யப்பட்டது, இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.