கார் - பைக் மோதல் பிஞ்சு படுகாயம்
கார் - பைக் மோதல் பிஞ்சு படுகாயம்
கார் - பைக் மோதல் பிஞ்சு படுகாயம்
ADDED : ஜூன் 19, 2025 07:10 PM
புதுடில்லி:தென் கிழக்கு டில்லி பகுதியில், ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் நேற்று, ஆடி கார் - பைக் மோதலில், 18 மாத குழந்தை படுகாயம் அடைந்தது.
விபத்து நடந்த பகுதியில் இருந்து, '18 மாத குழந்தை, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது' என்ற தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. ஆடி கார் - பைக் மோதலில், யார் மீது குற்றம் என்பதும் தெரியவில்லை.
போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில், யாருக்கும் உயிர் பலி ஏற்படவில்லை. குழந்தையுடன் படுகாயம் அடைந்த சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.