ADDED : ஜூலை 27, 2024 11:42 PM

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில், நாட்டின் பாதுகாப்பிலும், வீரர்களின் எதிர்காலத்திலும் சமரசம் செய்யும் வகையிலான குறுகியகால அக்னிவீரர் திட்டத்தை ரத்து செய்வோம். பழைய முறையிலேயே ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும்.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
தம்பட்டம் அடிக்கும் அகிலேஷ்!
லோக்சபா தேர்தல் வெற்றியை பெரிய அளவில் அகிலேஷ் தம்பட்டம் அடிக்கிறார். மக்களிடம் பொய்களை பேசி பெற்ற வெற்றி, அடுத்த சட்டசபை தேர்தலில் நடக்காது. அகிலேஷ் 2014, 2017, 2019, 2022 தேர்தல்களில் தோற்றதை மறந்துவிடக் கூடாது.
கேசவ் பிரசாத் மவுரியா, உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,
பாக்.,கிற்கா அனுப்ப முடியும்?
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி, டில்லி நோக்கி சென்ற விவசாயிகளை எல்லையில் முள்வேலிகளை, போட்டு தடுத்துள்ளனர். டில்லியில் இருந்து மத்திய அரசு செயல்படுவதால், அவர்கள் டில்லி செல்கின்றனர். அவர்களை நான் பாகிஸ்தானுக்கா அனுப்ப முடியும்?
பகவந்த் சிங் மான், பஞ்சாப் முதல்வர், ஆம் ஆத்மி