ADDED : ஜூலை 24, 2024 01:55 AM
13 மாநில பெயர் 'மிஸ்சிங்'
பட்ஜெட் உரையில், இந்தியாவின் 28 மாநிலங்களில் வடகிழக்கு உள்ளிட்ட 15 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றன. தமிழகம், தெலுங்கானா, அருணாச்சல், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் என, 13 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
ஏழாவது அதிசயம்
தொடர்ந்து ஏழு பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தார் நிர்மலா சீதாராமன். இதற்குமுன் மொரார்ஜி தேசாய் ஆறு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். ஒட்டுமொத்தமாக அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொரார்ஜி - 10; அடுத்த மூன்று இடங்களில் சிதம்பரம் - 9; பிரணாப் முகர்ஜி - 8; நிர்மலா சீதாராமன் - 7.