ஸ்கூட்டர் மீது லாரி மோதி சகோதரர்கள் உயிரிழப்பு
ஸ்கூட்டர் மீது லாரி மோதி சகோதரர்கள் உயிரிழப்பு
ஸ்கூட்டர் மீது லாரி மோதி சகோதரர்கள் உயிரிழப்பு
ADDED : செப் 14, 2025 03:24 AM
நொய்டா:ஸ்கூட்டர் மீது லாரி மோதி இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.
புதுடில்லி அருகே, நொய்டாவைச் சேர்ந்த பிரதீப் யாதவ், கார்த்திக் குமார் ஆகிய இருவரும் சகோதரர்கள். சம்பவத்தன்று ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
பிஸ்ராக் பகுதியில், அதிவேகமாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட இருவரும் அதே இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.