பீஹாரில் மீண்டும் பாலம் இடிந்தது: 9 நாளில் 5வது சம்பவம்
பீஹாரில் மீண்டும் பாலம் இடிந்தது: 9 நாளில் 5வது சம்பவம்
பீஹாரில் மீண்டும் பாலம் இடிந்தது: 9 நாளில் 5வது சம்பவம்
UPDATED : ஜூன் 28, 2024 10:51 PM
ADDED : ஜூன் 28, 2024 10:42 PM

பாட்னா: பீஹாரில் இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து பாலம்இடியும் சம்பம் 5-வது ஆக அதிகரித்து உள்ளது.
பீஹார்
மாநிலம் மதுபானி மாவட்டம் மாதேபூர் என்ற பகுதியில் முக்கிய ஆற்றின்
குறுக்கே கடந்த 2021ம் ஆண்டு ரூ. 3 கோடியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பாலத்தில் சுமார் 75 மீ தொலைவிற்கு இடிந்து
விழுந்தது. விழுந்த பாலத்தின் மீது தார்பாலினை மூடி வைத்து உள்ளனர். இதன்
புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இன்று இடிந்த விழுந்தது 5 வது
சம்பவம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய சம்பவங்கள் வருமாறு
1) ஜூன் 19-ம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
2) ஜூன் 22-ம் தேதியன்று சிவான் மாவட்டத்தில் காங்டாக் கால்வாய் குறுக்கே கட்ட பாலம் இடிந்து விழுந்தது.
3) ஜூன்23-ம் தேதியன்று கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது.
4)
ஜூன் 26 கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன்
இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு பாலம்
இடிந்து விழுந்தது.
5) இன்று (ஜூன் 28) மதுபானி மாவட்டத்தில் 5-வது
சம்பவமாக பாலம் இடிந்து விழுந்தது. இதன் மூலம் கடந்த 9 நாட்களில் 5 வது
முறையாக பாலம் இடிந்து விழும் சம்பவம் நடந்துள்ளது.