'உத்தரகன்னடாவில் மீண்டும் பா.ஜ.,வே வெற்றி பெறும்'
'உத்தரகன்னடாவில் மீண்டும் பா.ஜ.,வே வெற்றி பெறும்'
'உத்தரகன்னடாவில் மீண்டும் பா.ஜ.,வே வெற்றி பெறும்'
ADDED : ஜன 11, 2024 03:49 AM
உத்தரகன்னடா: ''உத்தரகன்னடா லோக்சபா தொகுதியில், இம்முறையும் பா.ஜ.,வின் வெற்றியை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது,'' என பா.ஜ., - எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்தார்.
முயற்சி
உத்தரகன்னடா, சிர்சியில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், உத்தரகன்னடா தொகுதியில் காங்கிரஸ் ஏற்கனவே செத்துவிட்டது. கடந்த முறை தேர்தலில், தென் மாநிலங்களில் யாருக்கும் கிடைக்காத ஓட்டுகள், எனக்கு கிடைத்தது. அந்த சாதனையை முறியடிக்க, இம்முறை முயற்சிக்கிறேன். இதற்கு தகுந்தார் போன்று, தொகுதியில் பணிகள் நடக்க வேண்டும்.
வழக்கம் போன்று, 2024ன் லோக்சபா தேர்தலில், உத்தரகன்னடா தொகுதியில் பா.ஜ.,வின் வெற்றியை, காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
தேர்தல் கணக்கு
பவுலர் இல்லாவிட்டால், பேட்டிங்குக்கு முக்கியத்துவம் இருக்காது. நன்றாக பவுலிங் போட்டு, சிக்சர் அடித்தால் மட்டுமே, மக்களுக்கு குஷியாக இருக்கும். சித்தராமையா போன்ற பவுலர், பா.ஜ.,வுக்கு எதிராக, பவுலிங் செய்ய வேண்டும். காங்கிரசின் எதிர்ப்பு இருந்தால்தான், தேர்தல் யுத்தம் களைகட்டும்.
பிப்ரவரி முதல் வாரம், பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளேன். கட்சியை வேரில் இருந்து பலப்படுத்துகிறேன். எதிரிகள் என்ன ஆலோசித்தாலும், தேர்தல் யுத்த கணக்கு வேறாக இருக்கும். அதற்கு தகுந்தபடி தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.