சிறுமியை கடத்திய பா.ஜ., - எம்.எல்.ஏ., மருமகனுக்கு வலை
சிறுமியை கடத்திய பா.ஜ., - எம்.எல்.ஏ., மருமகனுக்கு வலை
சிறுமியை கடத்திய பா.ஜ., - எம்.எல்.ஏ., மருமகனுக்கு வலை
ADDED : ஜூன் 14, 2025 09:08 PM
அமேதி:சிறுமியை கடத்திய வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ., மருமகன் மற்றும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் மோகன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, 8ம் தேதி கடத்தப்பட்டார். சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி மோகன்கஞ்ச் போலீசார், பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் பாஸி மருமகன் ரவிகுமார், அவரது நண்பர்கள் பாபாதீன், ரம்பச்சன் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, ரேபரேலி பஸ் ஸ்டாண்டில் சிறுமியை மீட்டனர். விசாரணை நடக்கிறது. மேலும், ரவிகுமார் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.