'தென் மாநிலங்களில் பா.ஜ. வெற்றி பெறும்'
'தென் மாநிலங்களில் பா.ஜ. வெற்றி பெறும்'
'தென் மாநிலங்களில் பா.ஜ. வெற்றி பெறும்'
ADDED : ஜன 25, 2024 04:50 AM

பெங்களூரு : “தென் மாநிலங்களில் பா.ஜ.வுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கும்,” என, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கணித்து உள்ளார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள, பா.ஜ. அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பசவராஜ் பொம்மை பேசியதாவது:
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ஒட்டுமொத்த நாட்டு மக்களும், பிரதமர் மோடி மீது, நம்பிக்கை வைத்து உள்ளனர்.
நாட்டில் மோடி அலை பலமாக வீசுகிறது. லோக்சபா தேர்தலில் இந்த முறை தென் மாநிலங்களான தமிழகம், தெலுங்கானா, ஆந்திராவில் பா.ஜ. க்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கும்.
கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். எஸ்.சி. - எஸ்.டி. சமூகத்தை, காங்கிரஸ் அரசு ஏமாற்றி உள்ளது.
எங்கள் ஆட்சியில் அந்த சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 11,000 கோடியை, வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் பயன்படுத்துகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி. - எஸ்.டி. சமூகங்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. அந்த சமூகத்தை காங்கிரஸ் தொடர்ந்து வஞ்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.