Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சர்ச்சையில் சிக்க வேண்டாம் நிர்வாகிகளுக்கு பா.ஜ., அறிவுரை

சர்ச்சையில் சிக்க வேண்டாம் நிர்வாகிகளுக்கு பா.ஜ., அறிவுரை

சர்ச்சையில் சிக்க வேண்டாம் நிர்வாகிகளுக்கு பா.ஜ., அறிவுரை

சர்ச்சையில் சிக்க வேண்டாம் நிர்வாகிகளுக்கு பா.ஜ., அறிவுரை

ADDED : பிப் 24, 2024 11:39 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 'தேர்தல் பிரசாரம் மற்றும் பொது இடங்களில் பேசும்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிக்கொள்ள வேண்டாம். வேட்பாளர் உள்ளிட்டோர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிக்க வேண்டும்' என, கட்சியின் மாநில பொறுப்பாளர்களை, பா.ஜ., தலைமை அறிவுறுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்டவை குறித்து நாடு முழுதும் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். பா.ஜ., மூத்த தலைவர்கள் தேர்தல் வியூகம் குறித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுதும் உள்ள 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தனித்தனியாக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் துணைப் பொறுப்பாளர்களை பா.ஜ., நியமித்துள்ளது.

இந்த பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின், 10 ஆண்டு ஆட்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அரசின் நலத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் வேட்பாளர், மாவட்ட, மாநில நிர்வாகிகள், மாநிலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.

மேலும், பூத் கமிட்டியை பலப்படுத்துவது, மக்களிடையே தொடர்ந்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us