Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் காங்., வேட்பாளர் ஆகிறாரா?

பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் காங்., வேட்பாளர் ஆகிறாரா?

பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் காங்., வேட்பாளர் ஆகிறாரா?

பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் காங்., வேட்பாளர் ஆகிறாரா?

ADDED : பிப் 24, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
மைசூரு, : “லோக்சபா தேர்தலில் எனது பழைய கட்சியான காங்கிரசில் இருந்து நான் ஏன் போட்டியிடக்கூடாது?” என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.

மைசூரு பத்திரிகையாளர் பவனில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காங்கிரசில் நான் எம்.பி.,யாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன். அதே கட்சியில் இருந்து நான் ஏன் லோக்சபா தேர்தலுக்கு போட்டியிடக் கூடாது?

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி தேர்தல் முடிவு என்ன ஆனது? அதே நிலை தான் இப்போதைய கூட்டணிக் கட்சிகளுக்கும் வரும்.

சட்ட மேலவையில் பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு பின் மாநிலத்தில் நடந்த முதல் தேர்தல் இதுவாகும். இது லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகும்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோருக்கு தைரியம் இருந்தால், காங்கிரசின் வாக்குறுதி திட்டங்களை தங்கள் கட்சி தொண்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லட்டும்.

விதான் சவுதாவுக்கு முன் உண்டியல் வைக்கவும் என்று விஜயேந்திரா சொல்வது எவ்வளவு உண்மை என்பது மக்களுக்கு தெரியும். தந்தையை சிறைக்கு அனுப்பியது யார் என்பதும் தெரியும். பா.ஜ., ஆட்சியில் கருவூலம் நிரம்பி வழிந்ததா?

மறைந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ், சித்தகங்கா மடாதிபதி சிவகமார சுவாமிகளுக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும். மாநில எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us