390 கோடி ரூபாய் வரி பாக்கி; வசூலிக்க முடியாமல் திணறும் பெங்களூரு மாநகராட்சி
390 கோடி ரூபாய் வரி பாக்கி; வசூலிக்க முடியாமல் திணறும் பெங்களூரு மாநகராட்சி
390 கோடி ரூபாய் வரி பாக்கி; வசூலிக்க முடியாமல் திணறும் பெங்களூரு மாநகராட்சி
ADDED : மார் 23, 2025 09:37 PM

பெங்களூரு: பெங்களூரு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 3.49 லட்சம் பேர் ரூ.390 கோடி வரி பாக்கி வைத்துள்ளனர். வசூலிக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
பெங்களூரு மாநகராட்சி அறிக்கை:
பெங்களூருவில் 3.49 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரிகளை செலுத்தத் தவறியதால், ரூ.390 கோடி நிலுவை சேர்ந்துள்ளது.
3.49 லட்சம் பேரில், 1.73 லட்சம் பேர் பல ஆண்டுகளாக வரி செலுத்தாதவர்கள். அதே நேரத்தில் 1.76 லட்சம் பேர் நடப்பு ஆண்டு வரி மட்டும் பாக்கி வைத்துள்ளனர்.
மீண்டும் மீண்டும் அறிவிப்புகள், எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள், ஐவிஆர்எஸ் அழைப்புகள், தனிப்பட்ட பின்தொடர்தல்கள் மற்றும் இணைப்பு அறிவிப்புகள் இருந்தபோதிலும், இவர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறப்பு ஆணையர் (வருவாய்) முனிஷ் மௌத்கில் கூறுகையில்,
சட்டத்தின்படி சொத்து வரியை வசூலிப்பதில் மாநகராட்சி உறுதியாக உள்ளது. வலுவான உள்கட்டமைப்பை ஏற்படுத்த வரி வசூல் மிகவும் முக்கியம். பொதுமக்கள் தாங்களாக முன்வந்து வரியை செலுத்த வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.