Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தொண்டர்கள் கருத்தின் அடிப்படையில் பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு உறுதி

தொண்டர்கள் கருத்தின் அடிப்படையில் பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு உறுதி

தொண்டர்கள் கருத்தின் அடிப்படையில் பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு உறுதி

தொண்டர்கள் கருத்தின் அடிப்படையில் பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு உறுதி

ADDED : பிப் 05, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ''தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் யார் வேட்பாளர்கள் என்பதை பா.ஜ., மேலிட தலைவர்கள் முடிவு செய்வர். தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில், தகுதியான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவர்.

வரும் 10ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெங்களூரு வருகிறார். இங்கும் நடக்கும் லோக்சபா தொகுதிகள் நிர்வாகிகளுடன் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நிலுவைத்தொகை


பால் உற்பத்தியாளர்கள் மீது கர்நாடக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், நிலுவையில் உள்ள 716 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதை வழங்காவிட்டால், அவர்களுடன் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்.

காங்கிரஸ் அரசின் அணுகுமுறையால், மக்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் இந்த அரசை சபித்து வருகின்றன. மாநில பால் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, ஏழைகளின் கோபத்துக்கும் மாநில அரசு ஆளாகி உள்ளது.

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வந்தார். இதன் மூலம் 26 லட்சம் கிராமப்புற விவசாயிகளிடம் இருந்து, தினமும் 80 முதல் 85 லட்சம் லிட்டர் பால் சேகரிக்கப்பட்டது.

இன்றைய காங்கிரஸ் அரசு, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையான 716 கோடி ரூபாயை விடுக்கவில்லை. இதனால் பால் சேகரிப்பு, 10 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது.

குற்றச்சாட்டு


பா.ஜ.,வை காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் விமர்சித்தது போன்று, நான் விமர்சிக்க மாட்டேன்.

ஒவ்வொரு முறையும் மாநில அரசு, தன் பொறுப்பை மறந்து மத்திய அரசை வம்புக்கு இழுக்கிறது. 'நிதி' என்ற பேச்சு வரும்போது, பிரதமர் மோடி கொடுக்கவில்லை' என குற்றம் சாட்டுகின்றனர்.

முதல்வரின் நேரடி பொறுப்பில் உள்ள நிதி மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை உட்பட மாநில அரசின் பல்வேறு துறைகளில், 1.37 லட்சம் கோப்புகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன.

வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பதாக காங்கிரஸ் அரசு பேசிக் கொண்டிருக்கிறது. மக்களின் கஷ்டங்களுக்கும், புகார்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கோப்புகளுக்கு தீர்வு காணாமல், இந்த அரசு கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு, அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை மறந்துவிட்டால், அதிகாரிகள் செயலற்றவர்கள் ஆகிவிடுகின்றனர். மக்களின் பொறுமை இழப்பதற்குள், அரசு விழித்துக் கொள்ளட்டும். சோர்ந்து போயிருக்கும் நிர்வாக அமைப்பு வேகமெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us