Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அயோத்தி பாக்ஸ்

அயோத்தி பாக்ஸ்

அயோத்தி பாக்ஸ்

அயோத்தி பாக்ஸ்

ADDED : ஜன 02, 2024 02:28 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- சம்பத் ராய்

பொதுச்செயலர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா

வரும் 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு, கோவிலில் கடவுள் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அதன் பின், பிரசாதங்களை வினியோகிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்துக்கு பின், வீட்டில் தீபங்களை ஏற்ற வேண்டும். இதை செய்யும்படி, உலகம் முழுதும் உள்ள இந்தியர்களிடம் பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.



போகன்வில்லா பூக்கள்

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தை அலங்கரிக்க, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து போகன் வில்லா பூக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இதுகுறித்து, போபாலைச் சேர்ந்த பூந்தோட்ட உரிமையாளர் ராம் குமார் ரத்தோர் கூறியதாவது:அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையிடம் இருந்து, ஐந்து முதல் ஆறு வகையான பூக்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. வெள்ளை, ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ண பூக்கள் இதில் அடங்கும். ஏற்கனவே, 20,000 பூக்கள் அனுப்பப்பட்டு விட்டன. விரைவில் மற்றவை அனுப்பப்படும். போகன் வில்லா பூக்கள் அனைத்து பருவங்களிலும் பூக்கும்; அவற்றை பராமரிக்க குறைந்த அளவு தண்ணீரே போதும்.இவ்வாறு அவர் கூறினார்.