நடுரோட்டில் பெண் மீது தாக்குதல்: உதவாமல் படம் பிடித்த கொடுமை
நடுரோட்டில் பெண் மீது தாக்குதல்: உதவாமல் படம் பிடித்த கொடுமை
நடுரோட்டில் பெண் மீது தாக்குதல்: உதவாமல் படம் பிடித்த கொடுமை
ADDED : ஜூன் 22, 2024 12:17 PM

போபால் : ம.பி.,யில் பெண் ஒருவரை குச்சியால் நபர் ஒருவர் தாக்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கண்டுகொள்ளாமல் அதனை படம் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ ம.பி., மாநிலம் தார் மாவட்டத்தின் தண்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் நடத்தியது நிர்ஷிங் என்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் யார் என்று தெரியவில்லை.
இந்த பெண்ணை நிர்ஷிங், நடுரோட்டில் குச்சியால் கடுமையாக தாக்கினார். அந்த பெண்ணை சிலர் பிடித்து கொண்டனர். பிறகு அவர்களும் தாக்கினர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யாமல், மொபைல் போனில் படம் பிடித்தனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக து வங்கியதும், பேலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து நிர்ஷிங்கை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.