நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்
நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்
நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்
ADDED : ஜூன் 22, 2024 11:57 AM

புதுடில்லி: ‛‛நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தால், சரியான முறையில் படித்து வெற்றி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் '', என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மே 5ல் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், குளறுபடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து தோ்வை ரத்து செய்ய வேண்டும் என எழுந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இது தொடர்பாக மத்திய கல்வித்துறை தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது சில மாணவர்களை மட்டும் தான் பாதித்தது. ஆனால் 2004 மற்றும் 2015ம் ஆண்டுகளில் வினாத்தாள் பெரிய அளவில் கசிந்ததால், அப்போது நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தற்போது தேர்வை ரத்து செய்தால், சரியான முறையில் படித்து, தேர்வு எழுதி வெற்றி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கும். இதனால், தேர்வை ரத்து செய்யவில்லை. இந்தத் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியான ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.