ADDED : ஜன 11, 2024 03:36 AM
ஹாவேரி: லாட்ஜில் தங்கிய முஸ்லிம் பெண், அவரது நண்பர் மீது, ஐந்து வாலிபர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஹாவேரி ஹனகல் டவுனில் உள்ள லாட்ஜுக்கு, 30 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர், வேறு மதத்தை சேர்ந்த ஆண் நண்பருடன் வந்தார். அவர்கள் இருவரும் லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர்.
இதுபற்றி அந்த பெண் சார்ந்த, சமூக வாலிபர்களுக்கு தெரிந்தது. பெண்ணும், அவரது நண்பரும் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.
இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, பெண்ணின் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பெண்ணை லாட்ஜில் இருந்து வெளியே இழுத்து வந்து, வாலிபர்கள் தாக்கினர். இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வேகமாக பரவியது. இந்த வீடியோவின் அடிப்படையில், வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.