காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு பகுதிகளில் செயற்கை மழை பொழியச் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. செயற்கை மழை பொழிவிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், மனிதன் மற்றும் விலங்குகளுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்குமா என்பது குறித்த விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில் சோதனை நடத்தப்படும். அது வெற்றி பெற்றால் செயற்கை மழை பொழிவிக்கப்படும்.
மஞ்சிந்தர் சிங் சிர்சா,
சுற்றுச்சூழல் அமைச்சர்