புதிய ப்ரோ வரிசை ஐபோன்: அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
புதிய ப்ரோ வரிசை ஐபோன்: அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
புதிய ப்ரோ வரிசை ஐபோன்: அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
ADDED : செப் 10, 2025 08:48 AM

புதுடில்லி: புதிய 17 ப்ரோ வரிசை ஐபோன்களை, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை உருவாக்கப்பட்ட ஐபோன்களில் மிகவும் சக்திவாய்ந்ததாக கூறப்படும் புதிய 17 ப்ரோ வரிசை, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா அமைப்பு, வேகமான ஏ19 ப்ரோ சிப் மற்றும் ஐபோனில் இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இதில் மொத்தம் 4 மாடல்கள் இருக்கிறது. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் உடன் புதிதாக ஐபோன் 17 ஏர் என்ற மாடலையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஐபோன் ஏர் என்பது, இதுவரை உருவாக்கப்பட்ட iphone களில் மிகவும் மெலிதானதாகும்.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை ஆப்பிளின் சமீபத்திய மற்றும் சிறந்த 3-நானோமீட்டர் ஏ19 ப்ரோ மொபைல் செயலியால் இயக்கப்படுகின்றன. ஐபோன் 17 இல் ஏ19 உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை, செப்டம்பர் 9 முதல் (நேற்று) முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கும். முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,49,900 விலையில் கிடைக்கும். அவை காஸ்மிக் ஆரஞ்சு, அடர் நீலம் மற்றும் வெள்ளை(சில்வர்) ஆகிய மூன்று வண்ணங்களில் வருகின்றன.
ஐபோன் 17 ப்ரோவிற்கு திரை அளவு 6.3-இன்ச் மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸுக்கு 6.9-இன்ச் ஆகும்.