மலம்புழாவில் பழங்கால பெருங்கல் கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு
மலம்புழாவில் பழங்கால பெருங்கல் கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு
மலம்புழாவில் பழங்கால பெருங்கல் கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு
ADDED : மார் 24, 2025 10:50 PM

பாலக்காடு; இந்திய தொல்பொருள் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணையின் அருகே, தீவு போன்ற பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு பெருங்கல் கட்டமைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் பெரும்பாலானவை, ஒற்றை அறை மற்றும் பல அறைகளைக் கொண்ட கல் கல்லறைகளாகும். அவையில் பெரிய கிரானைட் பாறைகள், 'லேட்டரைட்' கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பண்டைய கல்லறை வகையைச் சேர்ந்தவை.
இந்த நினைவுச்சின்ன கல் கட்டமைப்புகளிலிருந்து, கேரளத்தின் பண்டைய சமூகம் மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல்கள் பெற முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.
45 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து, 110க்கும் மேற்பட்ட பெருங்கல் கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை, இரும்பு யுகத்தில் அமைக்கப்பட்டவை என்று கருதுகிறோம். இவை, கேரளாவின் ஆரம்பகால இரும்பு யுக சமூகத்தைப் பற்றிய கூடுதல் கண்டுபிடிப்புகளுக்கு உதவும்.
இவ்வாறு, கூறினர்.