ADDED : மார் 24, 2025 09:04 PM

கோபம் கொள்ளாதே
ஒருவர் தனக்கு நல்லுரை வழங்குமாறு நபிகள் நாயகத்திடம் வேண்டினார். அதற்கு அவர், 'கோபம் கொள்ளாதே' என்றார். மீண்டும் அவர் நல்லுரை வழங்குமாறு கேட்க மீண்டும் அதையே கூறினார். எதற்காக இப்படி கூறினார் தெரியுமா... எல்லா தீமைக்கும் ஆணிவேராக உள்ளது கோபம். இதனால்
ஒருவர் அறிவு, உணர்வை இழந்து விடுவார். என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதையே இது மறக்கச் செய்யும். கொலை, தற்கொலை, குடும்பச்சண்டை, நாட்டின் அவலநிலை போன்றவை கோபத்தாலேயே விளைகின்றன. சரி. இதிலிருந்து விடுபட
குர்ஆன் வழிகாட்டுகிறது. 'ஷைத்தானின் துாண்டுதலால் கோபம் வருகிறது. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன். நெருப்பைத் தண்ணீரால் அணைத்து விடமுடியும். எனவே கோபம் வந்தால் உளு செய்து கொள்ளவும்' என்கிறது.
உண்மையில் பிறரை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்ல. கோபம் வரும் போது தன்னை அடக்குபவனே வலிமை வாய்ந்தவன்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி