ADDED : ஜன 16, 2024 06:07 AM
ஆமதாபாத் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி ராஜேஸ்வரி பென் 65, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மஹாராஷ்டிரா மாநிலம்மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
இதையடுத்து ராஜேஸ்வரி பென்னின் உடல் நேற்று காலை அவரது சொந்த ஊரான ஆமதாபாத் எடுத்து வரப்பட்டது. இறுதிச் சடங்கு
கள் செய்யப்பட்டு பின் எரியூட்டப்பட்டது. சகோதரி இறப்பு காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்அனைத்து பயண திட்டங்களையும் நேற்று ரத்து செய்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


