Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/எமர்ஜென்சியின் போது அரசியலமைப்பின் முகவுரை மாற்றம்: துணை ஜனாதிபதி பேச்சு

எமர்ஜென்சியின் போது அரசியலமைப்பின் முகவுரை மாற்றம்: துணை ஜனாதிபதி பேச்சு

எமர்ஜென்சியின் போது அரசியலமைப்பின் முகவுரை மாற்றம்: துணை ஜனாதிபதி பேச்சு

எமர்ஜென்சியின் போது அரசியலமைப்பின் முகவுரை மாற்றம்: துணை ஜனாதிபதி பேச்சு

UPDATED : ஜூன் 28, 2025 05:55 PMADDED : ஜூன் 28, 2025 05:54 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி : '' அரசியலமைப்பின் முகவுரை மாற்ற முடியாதது. ஆனால், எமர்ஜென்சியின் போது 1976ல் மாற்றப்பட்டது,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: அரசியலமைப்பின் முகவுரை மாற்ற முடியாதது. திருத்த முடியாதது. அரசியலமைப்பு வளர்வதற்கு அடிப்படையாக முகவுரை இருக்கிறது. ஆன்மாவாகவும், விதையாகவும் இருக்கிறது. ஆனால், பாரதத்துக்கான அரசியலமைப்பு முகவுரை, 42வது சட்டத்திருத்தம் மூலம், எமர்ஜென்சியின் போது 1976 ம் ஆண்டு திருத்தப்பட்டு, சோசியலிஸ்ட், மதசார்பற்ற தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை சேர்க்கப்பட்டன.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய போது, அம்பேத்கர் நிச்சயமாக அதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். உலகில், அரசியல் முகவுரை மாற்றத்துக்கு உள்ளான ஒரே நாடு இந்தியா மட்டுமே. வேறு எங்கும் மாறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

விளக்கம்டில்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபலே பேசுகையில், ''அரசியலமைப்பின் முகவுரையில், சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதிக்க வேண்டும். ''காங்கிரசின் எமர்ஜென்சி காலத்தில், இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அவை ஒருபோதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை,'' என்றார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது:'அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து, 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை அகற்ற வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபலே வலியுறுத்தவில்லை.'அவற்றின் உண்மையான உணர்வுகளை மீட்டெடுக்க வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டார்' என தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us