Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'காமாலை நோய் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் தான்'

'காமாலை நோய் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் தான்'

'காமாலை நோய் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் தான்'

'காமாலை நோய் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் தான்'

ADDED : பிப் 25, 2024 02:40 AM


Google News
Latest Tamil News
உத்தரகன்னடா: ''காமாலை நோய் உள்ளவர்களுக்கு, காண்பதெல்லாம் மஞ்சளாக தான் தெரியும்,'' என, உத்தரகன்னடா பா.ஜ., - எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே குற்றஞ்சாட்டினார்.

உத்தரகன்னடா, முண்டகோடில் நேற்று நடந்த பா.ஜ., தொண்டர்கள் கூட்டத்தில், எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே பேசியதாவது:

தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதியுதவி இல்லை என்கின்றனர். பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 11,000 கோடி ரூபாய் காணாமல் போயுள்ளது.

சித்தராமுல்லா கான்


மாநிலத்தை கொள்ளையடித்து, திவால் ஆக்கி, ஓட்டுகள் பெற முற்பட்டுள்ளனர். மத்திய அரசு நமக்கு வரிப்பணத்தை வழங்கவில்லை என, முதல்வர் சித்தராமையா கூறுகிறார். தமிழகம், ஆந்திரா, கேரளாவுக்கு இல்லாத வேதனை, இவருக்கு எதற்கு; சித்தராமுல்லா கானுக்கு என்ன பிரச்னை?

ஹிந்துக்கள் கொடுத்த வரிப்பணத்தில், அரசு நடக்கிறது. 'ஹிந்துக்களின் வரி, ஹிந்துக்களின் உரிமை' என, நாங்களும் போராட்டம் நடத்தினால், உங்களின் நிலை என்ன? சின்னத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை பார்த்து, பல நாடுகள் அவரை கொண்டாடுகின்றனர். இவரது செல்வாக்கை கண்டு வயிறு எரிபவர்களும் உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், நாட்டில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஆவேசம்


இவருக்கு பதிலடி கொடுத்து, முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

தங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என, எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவிடம் யாராவது கூறினார்களா? அரசியலமைப்பை மாற்றும்படி கூறுவோரை, துாக்கி எறியுங்கள்.

காமாலை நோய் உள்ளவர்களுக்கு, காண்பதெல்லாம் மஞ்சளாக தான் தெரியும்.

பா.ஜ.,வினர் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள். எனவே என்னை சித்தராமுல்லாகான் என, விமர்சிக்கின்றனர்.

கேரளத்தவர் ஏன், டில்லிக்குச் சென்று போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு தமிழகத்தினர் ஆதரவு தெரிவித்தது ஏன்? அனைத்து மாநிலங்களுக்கும் அநியாயம் நடந்துள்ளது.

மாநிலம் 100 ரூபாய் வரி செலுத்தினால், 13 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். இது நியாயமா?

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us