அகமதாபாத் விமான விபத்து மீட்பு பணிகள்
அகமதாபாத் விமான விபத்து மீட்பு பணிகள்
அகமதாபாத் விமான விபத்து மீட்பு பணிகள்

அகமதாபாத்: நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோர் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து நேற்று (ஜூன் 12) அன்று மதியம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம் லைனர் பயணிகள் விமானம் சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்து வெடித்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிருஷ்டவசமாக கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார்.
விமானம் மருத்துவ கல்லூரி ஒன்றின் மீது விழுந்து வெடித்ததில் மருத்து கல்லூரி விடுதியில் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த 5 கல்லூரி மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் பேரிடர் படையினர், தீயணைப்பு படைவீரர்கள் மருத்துவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக நேற்று இரவு தகவல்கள் வெளியானது.