பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கு 13 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கு 13 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கு 13 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
ADDED : ஜன 10, 2024 11:50 PM

புதுடில்லி: கேரளாவில், பேராசிரியர் ஒருவரின் கையை வெட்டிய வழக்கில், கடந்த 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
செமஸ்டர் தேர்வு
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா என்ற இடத்தில் உள்ள நியூமன் கல்லுாரி பேராசிரியரான ஜோசப், 2010 ஜூலையில், பி.காம்., செமஸ்டர் தேர்வுக்காக வினாத்தாள் தயார் செய்தார்.
இந்த வினாத்தாளில், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி இருந்ததாககக் கூறி, அவரை ஏழு பேர் அடங்கிய கும்பல் வழிமறித்து தாக்கியது.
இதில், பேராசிரியர் ஜோசபின் வலது கை துண்டானது.
இது குறித்து முதலில் கேரள போலீசார் விசாரித்த நிலையில், பின், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த செயலில், தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டிய என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஆறு பேரை கைது செய்தனர்.
சிறப்பு நீதிமன்றம்
இந்த வழக்கில், கடந்த ஆண்டு ஜூலையில் தீர்ப்பு அளித்த சிறப்பு நீதிமன்றம், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.
இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சவாத், 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.
'அவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு, 10 லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும்' என, என்.ஐ.ஏ., தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரளாவின் கண்ணுாரில் உள்ள மட்டன்னுார் என்ற இடத்தில், முக்கிய குற்றவாளி சவாதை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று காலை கைது செய்தனர்.