ஆட்சிக்கு வருவதற்கு முன் இனிக்கும் வாக்குறுதி; பின் விலைவாசி உயர்வு: பா.ஜ., சாடல்
ஆட்சிக்கு வருவதற்கு முன் இனிக்கும் வாக்குறுதி; பின் விலைவாசி உயர்வு: பா.ஜ., சாடல்
ஆட்சிக்கு வருவதற்கு முன் இனிக்கும் வாக்குறுதி; பின் விலைவாசி உயர்வு: பா.ஜ., சாடல்
ADDED : ஜூலை 17, 2024 01:42 PM

புதுடில்லி: 'இண்டியா கூட்டணியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு இனிக்கும் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின்னர் விலைவாசியை உயர்த்தி சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்து வருகின்றன' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில், வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:கர்நாடகாவைத் தொடர்ந்து தற்போது தமிழகமும் கொள்ளையடிக்கும் மாடலை வெளிப்படுத்தி உள்ளது. இண்டியா கூட்டணியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு இனிக்கும் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள்.
முதுகெலும்பு 'டமால்'
ஆட்சிக்கு வந்த பின்னர் விலைவாசியை உயர்த்தி சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்து வருகின்றன. தமிழகத்திலும் அரசு ஊழல் மிகுந்ததாக உள்ளது. சொந்த நலனுக்காகவே ஆட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன. தமிழகத்தில் தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 3வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
உண்மையான முகம்
ஏற்கனவே திமுக அரசு சொத்து வரியையும் குடிநீர் வரியையும் உயர்த்தி உள்ளது. கர்நாடகாவிலும் காங்கிரஸ் அரசு, மாநிலத்தை திவாலாக்கி இருக்கிறது. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல், பால், குடிநீர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.இண்டியா கூட்டணியின் உண்மையான முகம் இது தான். இவ்வாறு ஷேசாத் பூனவலா கூறியுள்ளார்.