பூமிக்குள் இருந்து விசித்திர சத்தம்
பூமிக்குள் இருந்து விசித்திர சத்தம்
பூமிக்குள் இருந்து விசித்திர சத்தம்
ADDED : பிப் 25, 2024 02:40 AM
மாண்டியா: மாண்டியாவின் பல இடங்களில், பூமிக்குள் இருந்து விசித்திரமான சத்தம் கேட்டது.
மாண்டியாவின், பல்வேறு இடங்களில் நேற்று மதியம் 1:30 மணியளவில், பூமிக்குள் இருந்து விசித்திரமான சத்தம் எழுந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போன்று இருந்தது. வீடு, கடைகளின் கதவு, ஜன்னல்கள் ஆட்டம் கண்டன. பொருட்கள் சிதறி விழுந்தன.
மக்கள் பயத்துடன், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.