இரண்டு மாடி கட்டடத்தில் பயங்கர தீ பல லட்சம் மதிப்பு பொருட்கள் நாசம்
இரண்டு மாடி கட்டடத்தில் பயங்கர தீ பல லட்சம் மதிப்பு பொருட்கள் நாசம்
இரண்டு மாடி கட்டடத்தில் பயங்கர தீ பல லட்சம் மதிப்பு பொருட்கள் நாசம்
ADDED : ஜன 27, 2024 11:06 PM
உப்பார்பேட்: பெங்களூரு பலேபேட்டையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு மாடி கட்டடத்தின் பெயின்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.
உப்பார்பேட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பலேபேட்டையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான பெயின்ட் கடை உள்ளது.
இரண்டு மாடி கொண்ட இக்கட்டடத்தில், நேற்று முன்தினம் இரவு கீழ் தளத்தில் உள்ள பெயின்ட் கடையில் தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வருவதற்குள், வேகமாக பரவிய தீ, முதல் மாடியில் உள்ள பை கடைக்கும் பரவியது. அப்போது கட்டடத்தின் உள்ளே இருந்த வாலிபர், வெளியே வர முடியாமல் தவித்தார்.
அந்நேரத்தில் அங்கு வந்த தீயணைப்பு படையினர், அந்த வாலிபரை மீட்டனர். ஜே.சி.பி., இயந்திரம் மூலம், பெயின்ட் கடையின் ஷெட்டரை உடைத்து, நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
பெயின்ட் கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''இக்கட்டடத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெயின்ட் வியாபாரம் செய்து வருகிறேன். இத்தகைய விபத்து நடப்பது இதுவே முதல் முறை,'' என கண்ணீருடன் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இரு கடைகளிலும் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. உப்பார்பேட் போலீசார் விசாரிக்கின்றனர்.