சமூக நலத்துறை விடுதியில் 14 வயது சிறுமிக்கு பிரசவம்
சமூக நலத்துறை விடுதியில் 14 வயது சிறுமிக்கு பிரசவம்
சமூக நலத்துறை விடுதியில் 14 வயது சிறுமிக்கு பிரசவம்
ADDED : ஜன 11, 2024 03:49 AM
பாகேப்பள்ளி: பாகேப்பள்ளியில் உள்ள அரசின் சமூக நலத்துறையின் மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வரும் 14 வயது சிறுமியான ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நேற்று முன்தினம் பிரசவம் நடந்துள்ளது. ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சிக்கபல்லாப்பூர் மாவட்டம், பாகேப்பள்ளியில் உள்ள அரசின் சமூக நலத்துறை மாணவர் விடுதியில் தங்கி, 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வயிற்று வலியென கூறி, அங்கன்வாடி ஊழியரான தனது தாயுடன், அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு ஊசி போட்டு வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
வீட்டுக்குச் சென்ற பின் சில நிமிடங்களில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை 2.2 கிலோ எடையளவு இருந்துள்ளது. சிறுமிக்கு பிரசவம் நடந்ததால் அவரின் உடல் நலம் கருதி, மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ அதிகாரிகள், போலீசுக்கும் புகார் செய்தனர். சிறுமியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் எனபாகேப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும், அந்த மாணவி உண்மையை சொல்லவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.