வெளிநாட்டு சிகரெட் 94,000 பாக்கெட் பறிமுதல்
வெளிநாட்டு சிகரெட் 94,000 பாக்கெட் பறிமுதல்
வெளிநாட்டு சிகரெட் 94,000 பாக்கெட் பறிமுதல்
ADDED : ஜூன் 29, 2025 10:19 PM
புதுடில்லி:தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட், 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு டில்லி வசந்த் குஞ்ச், நங்கல் தேவாத்தில் உள்ள ஒரு கிடங்கில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அந்தக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 94,000 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, ரிக் ஷித், 22, மற்றும் கிடங்கு உரிமையாளரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த செங்கப்பா, 40, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கிரீஸ் மற்றும் துபாய் நாடுகளிலிருந்து சிகரெட்டுகளை இறக்குமதி செய்து தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் தென் மாநிலங்களில் வினியோகம் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.