கிணற்று நீரை குடித்த 93 பேர் பாதிப்பு
கிணற்று நீரை குடித்த 93 பேர் பாதிப்பு
கிணற்று நீரை குடித்த 93 பேர் பாதிப்பு
ADDED : ஜூலை 01, 2024 11:50 AM

மும்பை: மஹாராஷ்ட்டிராவில் குடி நீர் குடித்த 93 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நந்தட் மாவட்டத்தில் முகுவான்தாண்டா என்ற கிராமத்தில் மொத்தம் 107 வீடுகள் உள்ளன. சுமார் 500 பேர் வசிக்கின்றனர். ஒரு கிணற்றில் இருந்து வந்த நீரை அப்பகுதியினர் பருகி வந்தனர்.
இந்நிலையில் பலருக்கு வயிற்றுவலி, வாந்திபேதி என பலர் பாதிக்கப்பட்டனர். 93 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே கிராமத்தில் பலர் பாதிக்கப்பட்டதால் சுகாதார துறையினர் அங்கு சென்று மாற்று குடிநீரை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.