மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மம்தாவுக்கு நட்டா ‛‛குட்டு''
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மம்தாவுக்கு நட்டா ‛‛குட்டு''
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மம்தாவுக்கு நட்டா ‛‛குட்டு''
ADDED : ஜூலை 01, 2024 12:07 PM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா என்ற பகுதியில், திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், பொது மக்கள் மத்தியில், நடுரோட்டில் ஒரு பெண் உட்பட இருவரையும் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது குறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு பெண் உட்பட இருவரையும் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது அங்கு பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கிறது.
ஆனால் திரிணமுல் கட்சி தொண்டர்களும், எம்.எல்.ஏ.,க்களும் இந்த செயலை நியாயப்படுத்துகிறார்கள். மம்தா ஆட்சியில், சந்தேஷ்காலி, உத்தர் தினாஜ்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.