821 அடி உயரத்தில் கோபுரம் தயாராகும் பெங்களூரு மாநகராட்சி
821 அடி உயரத்தில் கோபுரம் தயாராகும் பெங்களூரு மாநகராட்சி
821 அடி உயரத்தில் கோபுரம் தயாராகும் பெங்களூரு மாநகராட்சி
ADDED : ஜன 07, 2024 02:34 AM
பெங்களூரு : யஷ்வந்த்பூர், பையப்பனஹள்ளியில் 821 அடி உயரத்திலேயே நாட்டில் உயரமான கோபுரம் கட்ட பெங்களூரு மாநகராட்சி தயாராகி வருகிறது.
கர்நாடகா தலைநகரான பெங்களூரு சர்வதேச அளவில் பெயர் பெற்றது. தேசிய அளவில் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னோடியாக திகழ்கிறது.
இதனால் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளி நாட்டில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, 2022 அக்டோபரில், மிகப்பெரிய கோபுரம் கட்ட பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால், அந்நேரம் தேர்தல் சந்தர்ப்பம் என்பதால் ஒத்திவைக்கப்பட்டது.
புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின், கோபுரம் கட்டுவது குறித்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் பெங்களூரு மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஏற்கனவே பேசியிருந்தனர்.
இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, பெங்களூரு மாநகராட்சிக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
தவிர, யஷ்வந்த்பூர் அல்லது பையப்பனஹள்ளியில் கோபுரம் கட்ட எது சிறந்தது என்பதை அறிக்கையாக தயாரிக்க, அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
இத்திட்டம் ஒப்புதல் பெறும் பட்சத்தில், 821 அடி உயரத்தில் நாட்டிலேயே உயரமான கோபுரம் கட்டப்படும். இதன் உச்சியில் ஒரே நேரத்தில் 100 முதல் 150 பேர் பெங்களூரின் அழகை 360 கோணத்தில் கண்டு ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.