லாரி, பஸ் மோதி விபத்து ஆந்திராவில் 8 பேர் பலி
லாரி, பஸ் மோதி விபத்து ஆந்திராவில் 8 பேர் பலி
லாரி, பஸ் மோதி விபத்து ஆந்திராவில் 8 பேர் பலி
ADDED : பிப் 10, 2024 11:27 PM
முசுனுரு, ஆந்திராவில் நேற்று நடந்த விபத்தில், எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திராவின் ஸ்ரீகாளகஸ்திக்கு மாடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது.
நெல்லுார் மாவட்டம் முசுனுரு அருகே சுங்கச்சாவடி பகுதியில் நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் சென்றபோது, இரும்பு ஏற்றி சென்ற மற்றொரு லாரி, கால்நடை லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை தடுக்கும் விதமாக இரும்பு லாரியை வேறு பக்கம் டிரைவர் திருப்பியபோது, எதிரே சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு பயணியரை ஏற்றி சென்ற ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த மேலும் நான்கு பேர் நெல்லுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.