பெலகாவியில் 2 விபத்து 8 பேர் உயிரிழப்பு
பெலகாவியில் 2 விபத்து 8 பேர் உயிரிழப்பு
பெலகாவியில் 2 விபத்து 8 பேர் உயிரிழப்பு
ADDED : பிப் 24, 2024 04:11 AM
பெலகாவி : பெலகாவி, ராயபாகின், முகளகோடா கால்வாய் அருகில், ஜத்தா - ஜாம்போடி சாலையில், நேற்று மாலை வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து, பைக் மீது மோதி, பின் மரத்தில் மோதியது.
காரில் இருந்த குர்லாபுராவின் மல்லிகார்ஜுன் மராடே, 16, லட்சுமி மராடே, 19, ஆகாஷ் மராடே, 14, நிபனாளா கிராமத்தின் ஸ்ரீகார்ந் படதரி, 22, முகளகோடா கிராமத்தின் நாகப்பா, 48, உயிரிழந்தனர். இறந்தவர்களில் மூவர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
l பெலகாவி, யரகட்டியின், குருபகட்டே கிராமம் அருகில், நேற்று மாலை வேகமாக வந்த இரண்டு கார்கள், நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பயணித்த முத்து சத்யப்பா நாயக், 8, கோபால் நாயக், 45, அன்னபூர்ணா, 53, உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்தவர்கள், பெலகாவி, மூடலகியின், படகுந்தியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
வேறொரு காரில் இருந்த மூவர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.