குறள்மணி, தமிழ் மாமணி விருதுக்கு 65 பேர் தேர்வு
குறள்மணி, தமிழ் மாமணி விருதுக்கு 65 பேர் தேர்வு
குறள்மணி, தமிழ் மாமணி விருதுக்கு 65 பேர் தேர்வு
ADDED : ஜன 12, 2024 11:26 PM
தங்கவயல்: தங்கவயலில் தங்கவயல் தமிழ்ச்சங்கம் சார்பில் வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் 50 மாணவர்களுக்கு குறள்மணி விருதும்; தமிழுக்காக சேவைகள் செய்துவரும் 15 பேருக்கு தமிழ்மாமணி விருதும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் அளித்த பேட்டி:
தங்கவயலில் 1982 முதல் தமிழ்ச்சங்கத்தில் தமிழர் திருநாள், திருவள்ளுவர் தின விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
இவ்வாண்டு விழா 16ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல், திருக்குறள் ஓதுதல், திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவ செல்வங்களுக்கு குறள் மணி விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இவ்வாண்டின் விழா இம்மாதம் 16ல் தமிழ்ச் சங்கத்தில், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன், திருவள்ளுவர் கொடி, தமிழ்க்கொடி ஏற்றுதலுடன் துவங்குகிறது.
மாணவர்களின் தமிழ் மரபு நாட்டிய நடனங்கள், பரத நாட்டியம், தாரை தப்பட்டை மேளங்கள் முழங்க சிலம்பாட்டம், கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்படுகிறது.
தங்கவயலில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், வக்கீல்கள், பேராசிரியர்கள், மாணவ அமைப்பினர் பலரும் பங்கேற்கின்றனர்.
தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியும் அன்று துவங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது செயல் தலைவர் கமல் முனிசாமி, தீபம் சுப்பிரமணியம், திருமுருகன், கலை அன்பரசன், ஆர்.வி.குமார், கருணாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.