இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கோவிட்: 5 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கோவிட்: 5 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கோவிட்: 5 பேர் உயிரிழப்பு
ADDED : ஜன 03, 2024 10:52 AM

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு 5,33,371 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,440 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை கோவிட் தொற்றில் இருந்து 4,44,77,272 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 220.67 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.