கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 குழந்தைகள் தற்கொலை
கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 குழந்தைகள் தற்கொலை
கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 குழந்தைகள் தற்கொலை
ADDED : செப் 23, 2025 11:51 PM
பாலக்காடு:கேரள மாநிலத்தில், மொபைல் போன், சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால், 'டிஜிட்டல் போதை'க்கு அடிமையாகி, கடந்த நான்கு ஆண்டுகளில் 41 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, மாநில குற்றப்பதிவேடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கேரளாவில், 2021 முதல் நடப்பாண்டில் தற்போது வரையிலான காலத்தில், மாநிலத்தில் 'டிஜிட்டல் போதை' தொடர்பான பிரச்னைகளால், 41 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண் டுகளில், மொபைல் போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக, 1,992 குழந்தைகள் மாநிலத்தில் உள்ள மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர் .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.