Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி

ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி

ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி

ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி

UPDATED : ஜூன் 14, 2025 10:02 PMADDED : ஜூன் 14, 2025 08:58 PM


Google News
Latest Tamil News
பாலகாட்: மத்தியப் பிரதேசத்தின் பாலகாட்டில் நடந்த என்கவுன்டரில் மூன்று பெண்கள் உள்பட நான்கு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

நக்சல்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முற்றிலும் ஒழிக்க, மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, அந்தந்த மாநில போலீஸ் படையுடன் இணைந்து, மத்திய பாதுகாப்பு படையினர் நக்சல் இயக்கத்தின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

இந்நிலையில் ம.பி.,யில் பாலகாட் மாவட்டத்தின் அடர்ந்த காடுகளில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் மூன்று பெண்கள் உட்பட நான்கு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். ஹாக்போர்ஸ், மாவட்ட காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.


மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இந்த நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக மோகன் யாதவ் பதிவிட்டுள்ளதாவது:

நக்சல்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து,மேலும் ஒரு கையெறி ஏவுகணை, ஒரு துப்பாக்கி, இரண்டு 315 ரக போர் துப்பாக்கிகள் மற்றும் பிற உபகரணங்கள் உட்பட கணிசமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.

மார்ச் 2026 க்குள் நக்சலிசத்தை ஒழிக்கும் பணியில் மாநிலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பச்மதர் மற்றும் கட்டேஜிரியாவின் வனப்பகுதிகளில் இந்த மோதல் நடந்தது. ஏராளமான பணியாளர்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து வருகின்றனர்.

பாதுகாப்புப் படையினரின் துணிச்சலும், அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.

நமது துணிச்சலான வீரர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நக்சலிசத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் இது ஒரு பெருமையான தருணம்.



இவ்வாறு மோகன் யாதவ் பதிவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us