வாகனங்கள் மீது கல் வீச்சு 4 கார்கள், ஒரு லாரி சேதம்
வாகனங்கள் மீது கல் வீச்சு 4 கார்கள், ஒரு லாரி சேதம்
வாகனங்கள் மீது கல் வீச்சு 4 கார்கள், ஒரு லாரி சேதம்
ADDED : ஜன 31, 2024 12:04 AM
கெங்கேரி : சாலையில் செல்லும் வாகனங்கள் மீது, விஷமிகள் கல்லெறிந்ததால்பதற்றம் நிலவியது.
பெங்களூரின் சுங்கதகட்டே, கெங்கேரி பாதையின் நைஸ் சாலையில் நேற்று முன் தினம் இரவு 10:00 மணியளவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது விஷமிகள் மறைவாக இருந்து, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு கார்கள், ஒரு லாரி ஆகியவை சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.
வாகனத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இந்த சாலையில் விஷமிகள் கல்லெறியும் சம்பவங்கள், அவ்வப்போது நடக்கின்றன.
குடிபோதை அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில், கல்லெறிந்து வாகனங்களை தடுக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் ரோந்தை பலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.