சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 நீதிபதிகள் நியமனம்
சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 நீதிபதிகள் நியமனம்
சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 நீதிபதிகள் நியமனம்
ADDED : மே 30, 2025 12:26 AM
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.
இதனால், உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் பதவியிடங்கள் காலியானது.
புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றதை தொடர்ந்து, அவரது தலைமையில் நீதிபதிகளை தேர்வு செய்யும், உச்ச நீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் கூடியது.
இதில், மூன்று மாநில உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
இதன்படி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. அஞ்சாரியா, குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டன. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்திற்கான அறிவிப்பை, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் வெளியிட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 34 ஆக அதிகரித்துள்ளது.