டிரக் கவிழ்ந்ததால் தப்பிய 25 கோடி தேனீக்கள்
டிரக் கவிழ்ந்ததால் தப்பிய 25 கோடி தேனீக்கள்
டிரக் கவிழ்ந்ததால் தப்பிய 25 கோடி தேனீக்கள்
ADDED : ஜூன் 02, 2025 02:48 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் விவசாயிகள், மகரந்த சேர்க்கைக்காக தேனீக்கள் வளர்ப்பவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதனால், தேனீக்கள் வளர்ப்பு அங்கு ஒரு தொழிலாக உள்ளது. இவ்வாறு, 32,000 கிலோ எடையுள்ள தேனடைகளுடன் கூடிய டிரக் ஒன்று, அமெரிக்கா - வட அமெரிக்க நாடான கனடா எல்லையில் சென்று கொண்டிருந்தது. வாஷிங்டன் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த டிரக் திடீரென கவிழ்ந்தது. இதையடுத்து, அந்த டிரக்கில் இருந்த 25 கோடி தேனீக்கள் தப்பின.
உடனடியாக, 'அந்தப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் உதவிகள் கோரப்பட்டன. இதனால், சில மணி நேரங்களில், அனைத்து தேனீக்களும், டிரக்கில் உள்ள தேனடைக்குள் வந்து சேர்ந்தன.