வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது
வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது
வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது
UPDATED : ஜூலை 30, 2024 01:27 PM
ADDED : ஜூலை 30, 2024 11:03 AM

வயநாடு: கேரளாவில் நிலச்சரிவில் 41 பேர் பலியான நிலையில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, வயநாடு மாவட்டத்தில் , 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து முண்டக்கை, மெப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் கடுமையான 3 நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட உடன் உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதனையடுத்து காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில், 40 பேர் அடங்கிய குழவினர் மீட்பு பணிக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
குன்னூர் கண்டோன்மென்டில் இருந்தும் இரண்டு குழுவினர் வயநாடு விரைந்து உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனிடையே, விமானப்படைக்கு சொந்தமான ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் வகை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் முன்னின்று உதவி வருகின்றன.